டிஜிட்டல் பிரசுரம் விரைவாக மற்றும் எளிதானதாக மாறிவிட்டது!
Magic Author என்பது எந்த மொழியிலும் மின்புத்தகங்களை உருவாக்கி அவற்றை ஆன்லைனில் விற்க உதவும் ஒரு தளமாகும். உலகம் முழுவதிலும் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் கற்பனைத்திறன் கொண்ட வடிவமைப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.
இந்தத் தளமானது மின் புத்தக வடிவமைப்பு, கட்டமைத்தல் / லேஅவுட் ஆகியவற்றுக்கான தானியங்கி டூல்களால் நிரம்பியுள்ளது. கீழ்காணும் வடிவங்கள் உட்பட பல வடிவங்களில் மின்புத்தகங்களை உருவாக்குகிறது:
- Google மற்றும் Amazon ஸ்டோர்களுக்கு ePUB
- வலைத்தளத்திற்கு நிலையான PDF
- ஒரு பக்கம் அச்சிடக்கூடிய PDF
- இரு பக்கம் அச்சிடுவதற்குத் தயாரான PDF (நடுவில் காலி பக்கங்களுடன்)
திரைக்குப் பின்னே...
சப்தா
வணக்கம், என் பெயர் சப்தரிஷி சுரேஷ் அல்லது சப்தா, நான் ஒரு பிரசுரிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஒரு டேட்டா விஞ்ஞானி. 2010 இல் எனது "தி வேக்-அப் கால்" , புத்தகத்தைப் பிரசுரிக்க முயற்சிசெய்துகொண்டிருந்த பொழுது, பாரம்பரிய அச்சிடும் துறையில் நான் பல சவால்களை சந்தித்தேன். அதனால், பிற ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் வாழ்வை எளிதாக்க MagicAuthor.com இல் இந்தக் டூலைக் கட்டமைத்தேன்.
MagicAuthor ஒரு டிஜிட்டல் மட்டுமான யுக்தியைக் கடைபிடிக்கிறது, இதனால் அச்சு ஊடகத்தில் உடன் வரும் செலவுகள், தாமதங்கள் மற்றும் வரம்புகளைத் தவிர்க்கிறது.
அதிக சக்தி வாய்ந்த அம்சங்களைச் சேர்த்து இந்தத் தளத்தை நான் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன், இவை அனைத்தும் மிகக்குறைந்த செலவிலேயே.
நீங்கள் இன்னும் வேறென்ன அம்சங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள்? எனக்கு [email protected] இல் எழுதுங்கள்